எப் 16 விமானத்தை சுட்டு வீழ்த்தினோம் என இந்தியா கூறுவது அடிப்படையற்றது - பாகிஸ்தான்


எப் 16 விமானத்தை சுட்டு வீழ்த்தினோம் என இந்தியா கூறுவது அடிப்படையற்றது  - பாகிஸ்தான்
x
தினத்தந்தி 10 March 2019 3:44 PM IST (Updated: 10 March 2019 3:44 PM IST)
t-max-icont-min-icon

எப் 16 விமானத்தை சுட்டு வீழ்த்தினோம் என இந்தியா கூறுவது அடிப்படையற்றது என பாகிஸ்தான் கூறியுள்ளது.

பாகிஸ்தானில் பயங்கரவாதத்திற்கு எதிராக பயன்படுத்த வழங்கப்பட்ட எப் 16 விமானங்களை பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிராக பயன்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நடவடிக்கையை எதிர்கொள்ளலாம் என அஞ்சும் பாகிஸ்தான் பயன்படுத்தவில்லை என மழுப்புகிறது. 27-ம் தேதி இருதரப்பு இடையே வான்பகுதியில் நடந்த மோதலில் மிக்21 பிசோன் விமானத்தில் சென்ற இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் ஏவிய ஆர்-73 ஏவுகணை எப். 16 விமானத்தை தாக்கியது.

பாகிஸ்தான் ஏவிய அம்ராம் ஏவுகணை அபிநந்தன் சென்ற விமானத்தை தாக்கியது என விமானப்படையின் தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானின் எப் 16 விமானம் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் எப் 16 விமானத்தை சுட்டு வீழ்த்தினோம் என இந்தியா கூறுவது அடிப்படையற்றது என பாகிஸ்தான் கூறியுள்ளது.

சர்வதேச சமுதாயம் மற்றும் அரசியல் லாபத்திற்காக இந்திய மக்களையும் தவறாக வழிநடத்த இந்திய அரசு மற்றும் இந்திய மீடியாக்கள் தவறான தகவல்களை பரப்புகிறது, தோல்விகளையும்,  அதனாலான தர்மசங்கடங்களையும் மறைக்கவே இம்முயற்சியாகும். பாகிஸ்தானின் 16 விமானத்தை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியது என கூறுவது மிகவும் அடிப்படையற்ற தகவலாகும், இந்திய பார்வையாளர்களை திருப்தி செய்வதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது, செயல்முறையில் அவர்கள் தங்களுடைய பொய்களை அம்பலப்படுத்தி வருகிறார்கள் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

Next Story