ரேபரேலி தொகுதியில் 5-வது முறையாக களமிறங்கும் சோனியா


ரேபரேலி தொகுதியில் 5-வது முறையாக களமிறங்கும் சோனியா
x
தினத்தந்தி 11 March 2019 3:45 AM IST (Updated: 11 March 2019 12:44 AM IST)
t-max-icont-min-icon

ரேபரேலி தொகுதியில் 5-வது முறையாக சோனியா காந்தி களமிறங்க உள்ளார்.

புதுடெல்லி,

உத்தரபிரதேசத்தின் ரேபரேலி தொகுதி தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக விளங்கி வருகிறது. இங்கு 1971-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்ட தேர்தல்களில் 1977-ல் இந்திரா காந்தி தோல்வியடைந்ததை தவிர, பிற தேர்தல்கள் அனைத்திலும் அந்தக்கட்சி வெற்றிக்கனியை பறித்து இருக்கிறது.

இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த ரேபரேலியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, கடந்த 2004-ம் ஆண்டு முதல் போட்டியிட்டு வருகிறார். 2006-ல் நடந்த இடைத்தேர்தல் உள்ளிட்ட 4 தேர்தல்களில் அந்த தொகுதியில் போட்டியிட்டு அவர் வென்றிருந்தார். 2004-ம் ஆண்டு தேர்தலில் இந்த தொகுதியில் 2.5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்று இருந்தார். இதைத்தொடர்ந்து வருகிற தேர்தலுக்கும் ரேபரேலி தொகுதி சோனியாவுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட கட்சியின் வேட்பாளர் பட்டியலில் இந்த தகவல் இடம்பெற்று இருந்தது. இதன் மூலம் 5-வது முறையாக ரேபரேலி தொகுதியில் அவர் களமிறங்க உள்ளார். முன்னதாக சோனியாவின் உடல்நலக்குறைவு காரணமாக அவர் போட்டியிடுவது குறித்து சந்தேகங்கள் கிளம்பி இருந்த நிலையில், அவர் போட்டியிடுவதை கட்சித்தலைமை உறுதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story