பட்டாசுகளுடன் ஒப்பிடும்பொழுது வாகனங்களால் அதிக மாசுபாடு ஏற்படுகிறது; சுப்ரீம் கோர்ட்டு


பட்டாசுகளுடன் ஒப்பிடும்பொழுது வாகனங்களால் அதிக மாசுபாடு ஏற்படுகிறது; சுப்ரீம் கோர்ட்டு
x
தினத்தந்தி 12 March 2019 10:14 AM GMT (Updated: 12 March 2019 9:44 PM GMT)

பட்டாசுகளுடன் ஒப்பிடும்பொழுது வாகனங்களால் அதிக மாசுபாடு ஏற்படுகிறது என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் பட்டாசுகளால் அதிக மாசுபாடு ஏற்படுகிறது என கூறி அவற்றை முழுவதும் தடை செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.  இதுபற்றி நீதிபதிகள் எஸ்.ஏ. போப்டே மற்றும் எஸ்.ஏ. நசீர் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரணை மேற்கொண்டது.

இதில், மத்திய அரசு சார்பில் கூடுதல் வழக்கறிஞர் நட்கர்னி ஆஜரானார்.  இதன்பின் நீதிபதிகள் கூறும்பொழுது, பட்டாசுகள் மற்றும் வாகனங்கள் ஆகியவற்றால் ஏற்படும் மாசுபாடு விகிதம் பற்றி ஏதேனும் ஒப்பீட்டு ஆய்வு இருக்கிறதா? என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து அவர்கள், பட்டாசு தயாரிக்கும் தொழிலில் ஈடுபடும் மக்கள் வேலை இழந்து உள்ளனர்.  வேலைவாய்ப்பின்மையை உருவாக்க நீதிமன்றம் விரும்பவில்லை.

பட்டாசுகளை பற்றி நீங்கள் பேசுகிறீர்கள்.  ஆனால் மாசுபாடு ஏற்படுத்துவதில் உண்மையில் வாகனங்கள் அதிக பங்கு வகிக்கின்றன என தெரிவித்து உள்ளனர்.

Next Story