மும்பை பங்கு சந்தை: சென்செக்ஸ் குறியீடு 150 புள்ளிகள் உயர்வு; நிப்டி 11,400 புள்ளிகளை தொட்டது


மும்பை பங்கு சந்தை:  சென்செக்ஸ் குறியீடு 150 புள்ளிகள் உயர்வு; நிப்டி 11,400 புள்ளிகளை தொட்டது
x
தினத்தந்தி 14 March 2019 10:55 AM IST (Updated: 14 March 2019 10:55 AM IST)
t-max-icont-min-icon

மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 150 புள்ளிகள் உயர்ந்து காணப்படுகிறது.

மும்பை,

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய பொழுது சென்செக்ஸ் குறியீடு 141.80 புள்ளிகள் உயர்ந்து 37,893.97 புள்ளிகளாக உள்ளது.

இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 33.75 புள்ளிகள் உயர்ந்து 11,375.45 புள்ளிகளாக உள்ளது.

மும்பை பங்கு சந்தையில் வர்த்தக தொடக்கத்தில் யெஸ் வங்கி, சன் பார்மா, கோடக் வங்கி, எச்.டி.எப்.சி. டுவின்ஸ், எல் அண்டு டி, டாடா ஸ்டீல், இண்டஸ்இண்ட் வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் ஆகியவை லாபத்துடன் காணப்பட்டன.

எனினும், ஹீரோ மோட்டோகார்ப், டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ, எச்.யூ.எல்., டி.சி.எஸ்., ஐ.டி.சி. மற்றும் எம் அண்டு எம் ஆகியவற்றின் பங்குகள் 1.37 சதவீத நஷ்டத்துடன் இருந்தன.

Next Story