ராஜஸ்தானில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம்


ராஜஸ்தானில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம்
x
தினத்தந்தி 17 March 2019 4:10 AM GMT (Updated: 17 March 2019 9:14 AM GMT)

ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

சிகார்,

ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தில் இன்று அதிகாலை இலேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4 ஆக பதிவானது.  அதிகாலை 5.11 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், வீடுகளில் தூங்கி கொண்டு இருந்த மக்களும் பீதி அடைந்தனர். சில இடங்களில் மக்கள் தெருக்களில் கூடியதை காண முடிந்தது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை தகவல் எதுவும் வெளியாகவில்லை. 

Next Story