உத்தரபிரதேசத்தில் வெடி விபத்தில் 5 பேர் பலி


உத்தரபிரதேசத்தில் வெடி விபத்தில் 5 பேர் பலி
x
தினத்தந்தி 18 March 2019 12:04 AM IST (Updated: 18 March 2019 12:04 AM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேசத்தில் நிகழ்ந்த வெடி விபத்தில் சிக்கி 5 பேர் பலியாயினர்.

அஜம்கார்,

உத்தரபிரதேச மாநிலம் அஜம்கார் மாவட்டத்தில் முகேரிகஞ்ச் என்ற இடத்தில் உள்ள ஒரு கடையில் கியாஸ் பற்றவைக்கும் எந்திரம் நேற்று திடீரென வெடித்தது. அப்போது அந்த கடையில் அனுமதி இன்றி பதுக்கி வைக்கப்பட்டு இருந்த பட்டாசுகள் மீது தீ பற்றியது.

இதனால் அந்த பட்டாசு வெடிகள் வெடித்து சிதறின. அந்த நேரத்தில் அந்த கடையில் இருந்த 5 பேர் உடல் கருகி இறந்தனர். மேலும் 10–க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்த பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.


Next Story