ஒடிசா மாநிலத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பா.ஜனதாவில் இணைந்தார்


ஒடிசா மாநிலத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பா.ஜனதாவில் இணைந்தார்
x
தினத்தந்தி 18 March 2019 12:39 AM IST (Updated: 18 March 2019 12:39 AM IST)
t-max-icont-min-icon

ஒடிசா மாநிலத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் பா.ஜனதாவில் இணைந்தார்.

புதுடெல்லி,

ஒடிசா மாநிலம் கட்டாக் சேலேபூர் தொகுதி எம்.எல்.ஏ. பிரகாஷ் சந்திர பெகேரா. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் நேற்று முன்தினம் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்தார்.

இதுகுறித்து பிரகாஷ் சந்திர பெகேரா கூறுகையில், ‘பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைப்பண்பில் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன். பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதால் எனது தொகுதி இளைஞர்களை மத்திய அரசு கவர்ந்துள்ளது’ என்றார்.

பிரகாஷ் சந்திர பேகேரா பா.ஜனதாவில் இணைந்ததை மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் வரவேற்றுள்ளார்.

Next Story