ஆந்திர சட்டசபை தேர்தல்: 123 தொகுதிகளுக்கு பா.ஜனதா வேட்பாளர்கள் அறிவிப்பு


ஆந்திர சட்டசபை தேர்தல்: 123 தொகுதிகளுக்கு பா.ஜனதா வேட்பாளர்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 18 March 2019 3:15 AM IST (Updated: 18 March 2019 2:07 AM IST)
t-max-icont-min-icon

ஆந்திர சட்டசபை தேர்தலில், 123 தொகுதிகளுக்கு பா.ஜனதா வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

புதுடெல்லி,

பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா தலைமையில் கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள ஆந்திரா, அருணாசலபிரதேச மாநிலங்களுக்கு முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. ஆந்திராவில் மொத்தம் உள்ள 175 தொகுதிகளில் 123 இடங்களுக்கும், அருணாசலபிரதேசத்தில் உள்ள 60 தொகுதிகளில் 54 இடங்களுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

அருணாசலபிரதேச வேட்பாளர்களில் முதல்-மந்திரி பெமா காண்டு, ஆந்திராவில் ஜெ.எஸ்.வி.பிரசாத், ஹனுமந்து உதய்பாஸ்கர், சூர்யபிரகாஷ் ரோக்கம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.


Next Story