மராட்டியத்தில் தண்டவாளம் அருகே பப்ஜி விளையாடியபடி சென்ற 2 இளைஞர்கள் ரயிலில் அடிபட்டு பலி
மராட்டியத்தில் ரயில் தண்டவாளத்தையொட்டி பப்ஜி விளையாடியபடி சென்ற 2 இளைஞர்கள் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தனர்.
ஹிங்கோலி,
மராட்டிய மாநிலம் ஹிங்கோலி பகுதியில், பப்ஜி விளையாடியபடி ரயில் தண்டவளத்தை ஒட்டி சென்ற இரண்டு இளைஞர்கள் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தனர். இச்சம்பவம் பற்றி போலீசார் கூறியதாவது:- நாகேஷ் கோரே (24) அன்னபுர்னே ( 22) ஆகிய இரண்டு இளைஞர்களும் பப்ஜி விளையாடிபடி ரயில் தண்டவாளம் அருகே நடந்து சென்றுள்ளனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக ஐதராபாத் - ஆஜ்மீர் ரயிலில் இருவரும் அடிபட்டனர். இதில் நிகழ்விடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். உள்ளூர் மக்கள் இளைஞர்கள் உடல் ரயில் தண்டவாளம் அருகே கிடந்ததை கண்டு தகவல் அளித்தனர். இதன்பேரில் இளைஞர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் பலர் ஒன்றாக இணைந்து விளையாடும் ஆன்லைன் விளையாட்டான பப்ஜி சமீப காலத்தில் இளைஞர்கள் மத்தியில் அதிகம் பிரபலமாகி வருகிறது. தென்கொரியாவில் உருவாக்கப்பட்ட இந்த விளையாட்டு வன்முறை சிந்தனையை அதிகரிப்பதாக பரவலாக புகார்கள் எழுப்பப்படுகிறது.
Related Tags :
Next Story