எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்: இந்தியா பதிலடி
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்தது.
ஜம்மு,
ஜம்மு காஷ்மீரின் அக்னூர், சுந்தர்பேனி செக்டாரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.
நேற்று இரவு 10.25 மணியளவில் நடத்தப்பட்ட இந்த அத்துமீறிய துப்பாக்கிச்சூடு இன்று அதிகாலை வரை நீடித்ததாக ராணுவம் தரப்பில் வெளியான தகவல்கள் கூறுகின்றன.
மோர்டார்கள் ரக ஆயுதங்கள் மூலம் பாகிஸ்தான் நடத்திய அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. முன்னதாக, நேற்று பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் பலியானார்.
Related Tags :
Next Story