10-ம் வகுப்பு தேர்வு எழுதியவர்களுக்கு ஒரே சான்றிதழ் - சி.பி.எஸ்.இ. முடிவு


10-ம் வகுப்பு தேர்வு எழுதியவர்களுக்கு ஒரே சான்றிதழ் - சி.பி.எஸ்.இ. முடிவு
x
தினத்தந்தி 20 March 2019 12:40 AM IST (Updated: 20 March 2019 12:41 AM IST)
t-max-icont-min-icon

10-ம் வகுப்பு தேர்வு எழுதியவர்களுக்கு ஒரே சான்றிதழ் என்றும், இனி மதிப்பெண், கல்வி என தனித்தனியாக கிடையாது என்றும் சி.பி.எஸ்.இ. முடிவு செய்துள்ளது.

புதுடெல்லி,

சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழும், தேர்ச்சியா, இல்லையா என்பதைக் குறிக்கும் கல்வி சான்றிதழும் தனித்தனி சான்றிதழ்களாக வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், இந்த ஆண்டில் இருந்து சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு எழுதியவர்களுக்கு மதிப்பெண், கல்வி என இரண்டுக்கும் ஒரே சான்றிதழாக வழங்கப்பட உள்ளது. சி.பி.எஸ்.இ. தேர்வுக்குழு கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு நிர்வாக குழுவும் ஒப்புதல் அளித்துள்ளது.

இருப்பினும், 12-ம் வகுப்பு தேர்வு எழுதியவர்களுக்கு வழக்கம்போல் தனித்தனியாக 2 சான்றிதழ்கள் வழங்கப்படும்.


Next Story