தமிழகத்துக்கு தேர்தல் செலவு சிறப்பு பார்வையாளர் நியமனம் : தேர்தல் கமி‌ஷன் அறிவிப்பு


தமிழகத்துக்கு தேர்தல் செலவு சிறப்பு பார்வையாளர் நியமனம் : தேர்தல் கமி‌ஷன் அறிவிப்பு
x
தினத்தந்தி 20 March 2019 4:16 AM IST (Updated: 20 March 2019 4:16 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழ்நாட்டுக்கு தேர்தல் செலவு சிறப்பு பார்வையாளராக இந்திய வருவாய் பணி அதிகாரி மது மகாஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி, 

 தேர்தல் கமி‌ஷன் இந்த அறிவிப்பை வெளியிட்டது. இவர் வருமான வரித்துறையில் விசாரணை பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.

இவர் தேர்தல் நடவடிக்கையை மேற்பார்வையிடுதல், கண்காணித்தல் ஆகிய பணிகளில் ஈடுபடுவார். 

வாக்காளர்களுக்கு பணம், மது, இலவசங்கள் கொடுப்பது தொடர்பான புகார்கள் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பார் என்று தேர்தல் கமி‌ஷன் கூறியுள்ளது. 

அதேபோல மராட்டிய மாநிலத்துக்கு மற்றொரு இந்திய வருவாய் பணி அதிகாரி சைலேந்திர காண்டா நியமிக்கப்பட்டுள்ளார்.


Next Story