தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் - தேசிய மாநாட்டு காங்கிரஸ் கூட்டணி அறிவிப்பு + "||" + Congress has finalised alliance with National Conference in JK

ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் - தேசிய மாநாட்டு காங்கிரஸ் கூட்டணி அறிவிப்பு

ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் - தேசிய மாநாட்டு காங்கிரஸ் கூட்டணி அறிவிப்பு
ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு காங்கிரஸ் இடையே கூட்டணி அமைந்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை உறுதி செய்துள்ளோம் என காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார். தேசியத்தின் நலனை கருத்தில் கொண்டு இந்த கூட்டணி அமைந்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து பெரும் எச்சரிக்கையை எதிர்க்கொண்டுள்ள மாநிலத்தில் மதசார்பற்ற அமைப்புகளை வலுப்படுத்த கூட்டணி அமைக்கப்படுகிறது. காங்கிரஸ் ஜம்மு மற்றும் உதாம்பூர் தொகுதிகளில் போட்டியிடுகிறது.

ஸ்ரீநகர் தொகுதி தேசிய மாநாட்டு காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனந்த்நாக் மற்றும் பாரமுல்லா தொகுதியில் நட்பு ரீதியிலான போட்டியிருக்கும். அதாவது இரு கட்சிகளும் ஒருவரை ஒருவர் சாடாமல் போட்டியில் இருக்கும். யார் வெற்றிப்பெற்றாலும், எங்களுக்கான வெற்றிதான் என்பது அதனுடைய பொருளாகும். லாடக் தொகுதி தொடர்பாக நாங்கள் ஆலோசனையை மேற்கொண்டு வருகிறோம்.

இவ்வாறு குலாம் நபி ஆசாத் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. காங்கிரசை வலுப்படுத்த மண்டலம் வாரியாக மூன்று பொறுப்பாளர்கள் நியமிக்க முடிவு?
காங்கிரசை வலுப்படுத்த மண்டலம் வாரியாக மூன்று பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என சோனியா காந்தி கலந்து கொண்ட கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
2. ஆம் ஆத்மி கட்சிக்கு குட்பை சொன்ன எம்எல்ஏ அல்கா லம்பா
ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக ஆம் ஆத்மி எம்எல்ஏ அல்கா லம்பா தனது ட்விட்டரில் தெரிவித்து உள்ளார்.
3. ‘பொருளாதாரம் குறித்து காங்கிரஸ் பொய்களை பரப்புகிறது’ பா.ஜனதா குற்றச்சாட்டு
பொருளாதாரம் குறித்து காங்கிரஸ் பொய்களை பரப்புகிறது என்று பாரதீய ஜனதா குற்றம் சாட்டியுள்ளது.
4. மாநில காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டா போட்டி சோனியா காந்திக்கு நெருக்கடி கொடுக்கும் மூத்த தலைவர்கள்
மாநில காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டா போட்டி சோனியா காந்திக்கு மூத்த காங்கிரஸ் தலைவர்கள் நெருக்கடி கொடுத்து வருகிறார்கள்.
5. நிதி நெருக்கடியை நோக்கி நாட்டை பாஜக அரசு தள்ளுகிறது: காங்கிரஸ் விமர்சனம்
நிதி நெருக்கடியை நோக்கி நாட்டை பாஜக அரசு தள்ளுகிறது என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.