தேர்தலில் போட்டியில்லை... பிரதமருக்கான போட்டியில் இருக்கிறேன் - மாயாவதி


தேர்தலில் போட்டியில்லை... பிரதமருக்கான போட்டியில் இருக்கிறேன் - மாயாவதி
x
தினத்தந்தி 21 March 2019 4:22 PM IST (Updated: 21 March 2019 4:22 PM IST)
t-max-icont-min-icon

2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை என மாயாவதி கூறியுள்ளார்.


பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி பேசுகையில், நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை மற்றும் தேசத்திற்கான தேவை, கட்சியின் நலன், பொதுமக்களின் நலன் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டுள்ளேன்.  நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை என முடிவு செய்துள்ளேன்.

உ.பி.யில் அமைந்துள்ள மகா கூட்டணியில் எந்தஒரு பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக உள்ளேன். என்னுடைய தனிப்பட்ட வெற்றியைவிட ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி மிகவும் முக்கியமானது, அதற்காக பணியாற்றுகிறேன் என்று கூறியிருந்தார். 

தேர்தலில் போட்டியில்லை என்ற மாயாவதி, பிரதமருக்கான போட்டியில் உள்ளேன் என்பதை குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸை கடுமையாக சாடும் மாயாவதி, 1995-ம் ஆண்டு முதல் முறையாக நான் முதல்வரான போது, சட்டசபை உறுப்பினர் கிடையாது.

சட்டவிதிகளின்படி பிரதமராகவோ, முதல்வராகவோ பதவியேற்கும் ஒருவர் 6 மாதங்களில் அவையின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட வேண்டும். தேர்தலில் போட்டியிட முடியவில்லை என்பதால் எனக்கு எந்தஒரு மனச்சோர்வும் கிடையாது என கூறியுள்ளார். 


Next Story