நாடாளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தலுக்கான மற்றொரு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க.


நாடாளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தலுக்கான மற்றொரு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க.
x
தினத்தந்தி 23 March 2019 9:26 PM IST (Updated: 23 March 2019 9:26 PM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தலுக்கான மற்றொரு பா.ஜ.க. வேட்பாளர் பட்டியலை மத்திய மந்திரி ஜே.பி. நட்டா வெளியிட்டு உள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில் பீகார் மாநிலத்தில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர். மொத்தம் உள்ள 40 மக்களவை தொகுதிகளில் இன்று 39 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை மாநில பா.ஜ.க. பொறுப்பாளர் பூபேந்திர யாதவ் அறிவித்தார்.

இதேபோன்று நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான 11 வேட்பாளர்கள் அடங்கிய மற்றொரு பட்டியலை பா.ஜ.க. இன்று வெளியிட்டது.  இதில் தெலுங்கானாவின் 6 வேட்பாளர்கள், உத்தர பிரதேசத்தின் 3 வேட்பாளர்கள், கேரளா மற்றும் மேற்கு வங்காளம் ஆகியவற்றில் இருந்து தலா ஒரு வேட்பாளர் பற்றிய பெயர் பெட்டியலை அக்கட்சியின் மத்திய தேர்தல் குழு முடிவு செய்து வெளியிட்டது.

இதனை தொடர்ந்து மற்றொரு பா.ஜ.க. வேட்பாளர் பட்டியலை மத்திய மந்திரி ஜே.பி. நட்டா வெளியிட்டு உள்ளார்.  இதில், நாடாளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர் பெயர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.  இவற்றில், கோவா, மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட், குஜராத், இமாசல பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கான மக்களவை தொகுதிகளில் போட்டியிடும் 46 வேட்பாளர்கள், குஜராத் மற்றும் கோவா சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தலா 3 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியல் வெளியாகி உள்ளது.

கர்நாடகாவின் மண்டியா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் நடிகை சுமலதாவுக்கு பா.ஜ.க. ஆதரவு அளிக்கும் என நட்டா கூறியுள்ளார்.

Next Story