சாம்பிட்ரோடா கருத்துக்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் - அமித்ஷா கோரிக்கை


சாம்பிட்ரோடா கருத்துக்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் - அமித்ஷா கோரிக்கை
x
தினத்தந்தி 24 March 2019 5:15 AM IST (Updated: 24 March 2019 2:11 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் வெளிவிவகாரங்களை கவனிக்கும் சாம்பிட்ரோடா, பாகிஸ்தான் பாலகோட் தாக்குதல் குறித்து சில கேள்விகளை எழுப்பியிருந்ததற்கு பா.ஜனதா கண்டனம் தெரிவித்தது.

புதுடெல்லி, 

பா.ஜனதா தலைவர் அமித்ஷா இதுபற்றி கூறியதாவது:–

இந்தியாவில் நடைபெறும் பயங்கரவாத தாக்குதல்களில் பாகிஸ்தான் அரசுக்கும், ராணுவத்துக்கும் தொடர்பு உள்ளதாக காங்கிரஸ் நம்புகிறதா? தொடர்பு இருந்தால் யார் குற்றவாளி? பயங்கரவாத தாக்குதல் நடைபெறும்போது எல்லாம் இந்தியா பதிலடியாக வான் தாக்குதல் நடத்தக்கூடாது என்பது காங்கிரஸ் கொள்கையா?

பயங்கரவாத பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்க்க வேண்டும் என்பது தான் காங்கிரசின் கொள்கையா? சாம்பிட்ரோடா கூறியது அவரது தனிப்பட்ட கருத்து என்று நீங்கள் அதிலிருந்து விலகி இருக்கிறீர்களா? இந்த விலகி இருக்கும் கொள்கை உதவி செய்யாது. நாட்டு மக்களும் உங்களிடம் இருந்து விலகி இருப்பார்கள். ராகுல் காந்தி இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story