பிரதமர் மோடி பணக்காரர்களுக்குத்தான் காவலாளி சேவை செய்கிறார் - பிரியங்கா காந்தி
பிரதமர் மோடி பணக்காரர்களுக்குத்தான் காவலாளி சேவை செய்கிறார் என பிரியங்கா காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
பிரதமர் மோடி டுவிட்டரில் தொடங்கிய நானும் காவலாளிதான் பிரசாரத்தை காங்கிரஸ் தொடர்ந்து விமர்சனம் செய்கிறது. காவலாளி என்று தன்னை அழைத்துக்கொள்ளும் பிரதமர் மோடியை காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாக சாடியுள்ளார். ‘‘பணக்காரர்களுக்குத்தான் காவலாளிகள் சேவை செய்கிறார்கள். அவர்கள் ஏழை எளியோரைப்பற்றி கவலை கொள்வதே இல்லை’’ என பிரியங்கா டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
கரும்பு விவசாயிகள் இரவும், பகலும் கடுமையாக உழைக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத்தொகையினை வழங்குவதற்கு கூட மாநில அரசு பொறுப்பு ஏற்பதில்லை. கரும்பு விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடி பாக்கி வைத்துள்ளனர். இதன் அர்த்தம், கரும்பு விவசாயிகளின் குழந்தைகளின் படிப்பு கேள்விக்குறியாகிறது. அவர்களது சாப்பாடுக்கு வழியின்றி போகிறது.
அவர்களின் சுகாதார தேவைகளை கவனிக்க முடிவதில்லை. அவர்களின் அடுத்த சாகுபடி திட்டமும் அப்படியே நின்று விடுகிறது என பிரியங்கா தெரிவித்துள்ளார். உ.பி.யில் கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை ரூ.9 ஆயிரத்து 836 கோடி என தகவல் வெளியாகியது. இதனை மையப்படுத்தி பிரதமர் மோடிக்கு பிரியங்கா கேள்வியை எழுப்பியுள்ளார்.
Related Tags :
Next Story