தோல்வி பயத்தால் ராகுல் கேரளாவை நோக்கி ஓடுகிறார் - பா.ஜனதா கிண்டல்


தோல்வி பயத்தால் ராகுல் கேரளாவை நோக்கி ஓடுகிறார் - பா.ஜனதா கிண்டல்
x
தினத்தந்தி 31 March 2019 10:07 AM GMT (Updated: 2019-03-31T16:39:01+05:30)

தோல்வி பயத்தால் ராகுல் காந்தி கேரளாவை நோக்கி ஓடுகிறார் என பா.ஜனதா கேலி செய்துள்ளது.2019 தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதி தொகுதியுடன், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். இந்நிலையில் உ.பி. தோல்வி அடைந்துவிடுவோம் என ராகுல் கேரளாவிற்கு ஓடுகிறார் என பா.ஜனதா கிண்டல் செய்து வருகிறது. 

பா.ஜனதா தலைவர் அமித்ஷா பேசுகையில், அமேதியில் தோல்வியடைந்துவிடுவோம் என பயந்துவிட்ட ராகுல் காந்தி கேரளாவை நோக்கி ஓடுகிறார் என குறிப்பிட்டுள்ளார். 

உத்தரபிரதேச மாநிலம் நாகினாவில் பிரசாரம் செய்த அமித்ஷா பேசுகையில், “ராகுல் காந்தி கேரளாவை நோக்கி ஓடுகிறார் என வாட்ஸ்-அப்பில் படித்தேன். அவர் ஏன் கேரளாவிற்கு தப்பித்து ஒடுகிறார்? அவர் அமேதியில் என்ன செய்தார் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். இப்போது சந்தர்ப்பவாத முறையில் வெற்றிப்பெற கேரளாவிற்கு ஓடுகிறார்,” என விமர்சனம் செய்துள்ளார். 

Next Story