நாட்டை பாழாக்கி விட்டார்: சுதந்திர இந்தியாவில் மோடி அரசுதான் ஊழல் நிறைந்தது - அரவிந்த் கெஜ்ரிவால் சொல்கிறார்


நாட்டை பாழாக்கி விட்டார்: சுதந்திர இந்தியாவில் மோடி அரசுதான் ஊழல் நிறைந்தது - அரவிந்த் கெஜ்ரிவால் சொல்கிறார்
x
தினத்தந்தி 1 April 2019 3:45 AM IST (Updated: 1 April 2019 3:15 AM IST)
t-max-icont-min-icon

நாட்டை பாழாக்கி விட்டார் என்றும், சுதந்திர இந்தியாவில் மோடி அரசுதான் ஊழல் நிறைந்தது என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

விசாகப்பட்டினம்,

ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியிடும் சந்திரபாபு நாயுடுவை ஆதரித்து, டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஆகியோர் நேற்று விசாகப்பட்டினத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதில் கெஜ்ரிவால் பேசும்போது, ‘நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து இதுவரை அமைந்த அரசுகளில், மோடி அரசுதான் ஊழல் நிறைந்தது. மோடி யாருடைய கருத்தையும் கேட்கமாட்டார். அமித்ஷாவிடம் மட்டுமே ஆலோசனை கேட்பார். இருவரும் சேர்ந்து கடந்த 5 ஆண்டுகளில் நாட்டை பாழாக்கி விட்டனர்’ என்று கூறினார்.

மத்திய விசாரணை அமைப்புகளை நமது நிறுவனங்கள் மீதும், மக்கள் மீதும் மோடி அரசு ஏவி விடுவதாக குற்றம் சாட்டிய கெஜ்ரிவால், மோடி-ஷா கூட்டணி இந்தியாவை மதரீதியாக பிரித்து விட்டதாகவும் தெரிவித்தார். இது கடந்த 70 ஆண்டுகளில் பாகிஸ்தானால் கூட முடியவில்லை என்றும் கூறினார்.

Next Story