நியாய் திட்டத்தின்கீழ் பணம் பெண்களின் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் -ராகுல் காந்தி
நியாய் திட்டத்தின்கீழ் பணம் பெண்களின் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருவாய் உறுதியளிப்பு திட்டம் (நியாய்) செயல்படுத்தப்படும் என ராகுல் காந்தி அறிவித்தார். இதன்மூலம் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் பரம ஏழைகளுக்கு மாதந்தோறும் ரூ.6 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கப்படும் என குறிப்பிட்டார். இதனை பா.ஜனதா விமர்சனம் செய்து வருகிறது.
இந்நிலையில் நியாய் திட்டத்தின்கீழ் பணம் பெண்களின் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
தெலுங்கானாவில் பிரசாரத்தில் பேசிய ராகுல் காந்தி, “நியாய் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் நிதி குடும்பத்தில் உள்ள பெண்ணின் கணக்கில் செலுத்தப்படும். ஒவ்வொரு மாதமும் அவருடைய கணக்கில் பணம் நேரடியாக டெபாசிட் செய்யப்படும். இதனால் இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான பெண்களுக்கு அதிகாரமளித்தல் கிடைக்கும்,” எனக் கூறியுள்ளார். ரூ. 15 லட்சம் கொடுப்பேன் என பிரதமர் மோடி ஏமாற்றிவிட்டார். ஆனால் நாங்கள் குறைந்தபட்ச வருவாய் திட்டத்தில் எங்களுடைய வாக்குறுதியை நிறைவேற்றுவோம் என குறிப்பிட்டுள்ளார் ராகுல் காந்தி.
Related Tags :
Next Story