உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கூட்டணிக்கு தேசியவாத காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவு


உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கூட்டணிக்கு தேசியவாத காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவு
x
தினத்தந்தி 2 April 2019 12:00 AM IST (Updated: 1 April 2019 11:00 PM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கூட்டணிக்கு, தேசியவாத காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கி உள்ளது.

லக்னோ,

உத்தரபிரதேச மாநில தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் ரமேஷ் தீக்ஷித் கூறியதாவது:-

பா.ஜனதாவை தோற்கடிக்க அனைத்து கட்சிகளும் தீவிரமாக செயல்பட வேண்டியுள்ளது. காங்கிரஸ்-பா.ஜனதா நேரடியாக மோதும் மாநிலங்களில் அதிகபட்ச முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன்மூலம் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். மோசமான தோல்வியை சந்திக்கும். இந்த மாநிலத்தில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், ராஷ்டிரிய லோக் தளம் ஆகிய கட்சிகளின் கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறோம். அனைத்து மாவட்ட நிர்வாகிகளும், தொண்டர்களும் இந்த மகா கூட்டணியின் வெற்றிக்கு பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story