2030 ஆம் ஆண்டிற்குள் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. அதில் 2030 ஆம் ஆண்டிற்குள் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும் என கூறப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் தலைமையில் 19 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. பல்வேறு வாழ்க்கை நிலையில் உள்ள மக்களின் கருத்துகளை கேட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, சோனியாகாந்தி, மன்மோகன் சிங் ஆகியோர் இன்று தேர்தல் அறிக்கையை கட்சியின் தலைமை அலுவலகத்தில் வெளியிட்டனர்.
பின்னர் ராகுல்காந்தி பேசியதாவது.
ஒரு ஆண்டுக்கு முன்பே தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பணியை தொடங்கி விட்டோம். அனைத்து தரப்பினரின் விருப்பங்களையும் பூர்த்தி செய்யும் வகையில் தேர்தல் அறிக்கை இருக்கும். 5 முக்கிய அம்சங்களை கொண்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது.
தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* நியாய் எனப்படும் குறைந்த பட்ச வருவாய் திட்டம் மூலம் ஆண்டுக்கு ரூ 72 ஆயிரம் வழங்கப்படும். பணமதிப்பிழப்பு பாதிப்புகளை சரி செய்யும் வகையில் நியாய் திட்டம் இருக்கும். நியாய் திட்டத்தால் நாட்டில் உள்ள 20 சதவீத குடும்பங்கள் பயன்பெறும்.
* கிராம ஊராட்சிகளில் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும்.
* மத்திய அரசின் பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.
* புதிய தொழில் தொடங்க 3 ஆண்டுகளுக்கு எந்த அனுமதியும் பெறத்தேவையில்லை
* 2030 ஆம் ஆண்டிற்குள் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்.
* 100 நாள் வேலை திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும்.
* விவசாய கடன்களை திருப்பி செலுத்தாவிட்டால் அது கிரிமினல் குற்றமாக கருத்தப்பட மாட்டாது.
* விவசாயத்திற்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story