நாடாளுமன்ற தேர்தல்; திரிணாமுல் காங்கிரசின் இசை வீடியோ வெளியீடு
மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி மக்களவை தேர்தலை முன்னிட்டு இசை வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. மேற்கு வங்காளத்தில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமுடன் ஈடுபட்டு வருகிறது. மொத்தமுள்ள 42 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
இதற்காக இசை வீடியோ ஒன்றை மம்தா இன்று வெளியிட்டு உள்ளார். இதில் மேற்கு வங்காளத்தில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் வளர்ச்சி ஆகியவை உள்ளது போன்றும், நாட்டின் மற்ற பகுதிகளில் அச்சம் நிறைந்த சூழ்நிலை உள்ளது போன்றும் காட்சிகள் உள்ளன. இந்த வீடியோ இரண்டரை நிமிடங்கள் ஓடுகின்றன.
முகநூல், டுவிட்டர், யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய அவரது அனைத்து சமூக வலைதளங்களிலும் இந்த வீடியோவானது பகிரப்பட்டு உள்ளது.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள செய்தியில், வருகிற மக்களவை தேர்தலுக்காக, மா, மதி, மனுஷ் ஆகிய புதிய இசை வீடியோவை பகிர்ந்து கொள்வதில் அதிக மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்து உள்ளார்.
பிரதமர் மோடியின் மத்திய அரசுக்கான பல்வேறு நலத்திட்டங்களுடன் மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் அரசின் திட்டங்களை ஒப்பிட்டு வலைத்தள தொடர் ஒன்றை கடந்த வாரம் இக்கட்சி வெளியிட்டது.
Related Tags :
Next Story