என் சகோதரர் தைரியமானவர் ராகுல்காந்தி சகோதரி பிரியங்கா காந்தி சொல்கிறார்


என் சகோதரர் தைரியமானவர் ராகுல்காந்தி சகோதரி பிரியங்கா காந்தி சொல்கிறார்
x
தினத்தந்தி 4 April 2019 4:08 PM IST (Updated: 4 April 2019 5:01 PM IST)
t-max-icont-min-icon

என் சகோதரர் தைரியமானவனர் என ராகுல்காந்தி சகோதரி பிரியங்காகாந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறி உள்ளார்.

புதுடெல்லி

பிரியங்கா காந்தி சமீபத்தில்தான் முழு நேர அரசியலில் இறங்கினார். உ.பி. மாநில பொதுச் செயலாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் போட்டியிடவில்லை. மாறாக பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ளார்.

ராகுல்காந்தி இன்று வயநாடு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.  அப்போது அவருடன் அவரது சகோதரி பிரியங்காவும் வந்து இருந்தார்.

இந்த நிலையில் பிரியங்கா காந்தி தனது ட்விட்டரில் கூறி இருப்பதாவது:-

"என் சகோதரர், என்னுடைய நம்பிக்கைக்குரிய தோழன், எல்லாவற்றையும் விட மிகுந்த தைரியமானவனர். வயநாடு அவரை பத்திரமாக பார்த்துக் கொள்ளட்டும். அவர் உங்களை எப்போதும் கைவிட மாட்டார்" என கூறி உள்ளார்.


Next Story