தந்தை கார் சாவி கொடுக்காத ஆத்திரத்தில் துப்பாக்கியால் சுட்டு மகன் தற்கொலை


தந்தை கார் சாவி கொடுக்காத ஆத்திரத்தில் துப்பாக்கியால் சுட்டு மகன் தற்கொலை
x
தினத்தந்தி 4 April 2019 8:37 PM IST (Updated: 4 April 2019 8:37 PM IST)
t-max-icont-min-icon

நண்பர்களுடன் செல்ல தந்தை கார் சாவி கொடுக்காத ஆத்திரத்தில் துப்பாக்கியால் சுட்டு மகன் தற்கொலை செய்து கொண்டார்.

மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் ஆவாத்புரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் சைலேந்திரா சிங் (வயது 28).  திருமணத்திற்கு பின் இவர் தந்தை மற்றும் குடும்பத்தினருடன் ஒன்றாக வசித்து வந்துள்ளார்.

இவர் நண்பர்களுடன் செல்ல வேண்டும் என கூறி தனது தந்தையிடம் கார் சாவி கேட்டுள்ளார்.  ஆனால் அதற்கு அவர் மறுத்து விட்டார்.

இதன்பின் சைலேந்திராவின் தந்தை, தனது தந்தையை காண்பதற்காக மருத்துவமனைக்கு சென்று விட்டார்.  இதனிடையே கார் சாவி தராத ஆத்திரத்தில் சைலேந்திரா வீட்டில் வைத்து கைத்துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவர் குடிபோதையில் இருந்துள்ளார் என தெரிய வந்துள்ளது.  அவருக்கு கைத்துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story