நான் நல்ல பாடம் கற்பிப்பேன் என பயங்கரவாதிகளுக்கு தெரியும் - பிரதமர் மோடி பிரசாரம்


நான் நல்ல பாடம் கற்பிப்பேன் என பயங்கரவாதிகளுக்கு தெரியும் - பிரதமர் மோடி பிரசாரம்
x
தினத்தந்தி 5 April 2019 2:04 PM IST (Updated: 5 April 2019 5:12 PM IST)
t-max-icont-min-icon

நான் நல்ல பாடம் கற்பிப்பேன் என பயங்கரவாதிகளுக்கு தெரியும் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹாவில் பிரசாரம் செய்த பிரதமர் மோடி, காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் - சமாஜ்வாடி கூட்டணியை கடுமையாக விமர்சனம் செய்தார். 

 “இந்த கட்சிகளின் பயங்கரவாதம் மீதான மென்மையான அணுகுமுறை பயங்கரவாதிகளுக்கு உதவி மட்டும் செய்யவில்லை, உங்களுடைய பாதுகாப்பை சமரசம் செய்துள்ளன. வாக்கு வங்கி அரசியலுக்காக பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்களை சுதந்திரமாக செயல்படவிட்டனர். ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக அமைதி நிலைநாட்டப்பட்டுள்ளது.

ஏதாவது செய்தோம் என்றால் மோடி நமக்கு சரியான பாடம் கற்பிப்பார் என்பது பயங்கரவாதிகளுக்கு தெரியும். எங்கு ஒளிந்தாலும் தப்பிக்க முடியாது என பயங்கரவாதிகளுக்கு தெரியும் என்றார்.

பயங்கரவாதம் விவகாரத்தில் மீண்டும் பாகிஸ்தானை மையப்படுத்தி எதிர்க்கட்சிகளை விமர்சனம் செய்தார். 

Next Story