எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு


எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு
x
தினத்தந்தி 6 April 2019 12:42 PM IST (Updated: 6 April 2019 12:42 PM IST)
t-max-icont-min-icon

எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது.

ஜம்மு,

ஜம்மு காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. அதிகாலை 2.30 மணிக்கு நவஷேரா மற்றும் கலால் ஆகிய பகுதிகளில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. 

பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானின் துப்பாக்கிச்சூட்டில், எல்லையோர கிராமத்தில் வசிக்கும் சஞ்சீவ்குமார் மற்றும் அவரது மனைவி ரிதாகுமாரி ஆகிய இருவரும் காயம் அடைந்தனர்.  

Next Story