காங்கிரஸ் கட்சி வறுமையை அரசியல் ஆயுதம்போல் பயன்படுத்துகிறது; பிரதமர் மோடி
காங்கிரஸ் கட்சி வறுமையை அரசியல் ஆயுதம்போல் எப்பொழுதும் பயன்படுத்துகிறது என பிரதமர் மோடி குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
சோன்பூர்,
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. ஒடிசாவின் பலாங்கீர் மக்களவை தொகுதியின் கீழுள்ள சோன்பூர் நகரில் பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரசார பேரணியில் கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில் அவர் பேசும்பொழுது, காங்கிரஸ் கட்சியானது எப்பொழுதும் வறுமையை அரசியல் ஆயுதம்போல் பயன்படுத்துகிறது. இதன்வழியே அரசியல் பலனை அது பெறுகிறது. காங்கிரஸ் இருக்கும்வரை வறுமையை ஒழிக்க முடியாது என பேசினார்.
காங்கிரஸ் கட்சியை ஒழித்து விட்டால் வறுமை தன்னாலேயே ஒழிந்து விடும். அக்கட்சி பல தலைமுறைகளாக வறுமையை ஒழிப்போம் என கூறி வருகிறது. ஆனால் அதனை செய்வதற்கு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. ஏழை மக்கள் ஏழைகளாவே உள்ளனர். அவர்களின் தலைவர்கள் மற்றும் மந்திரிகள் பணக்காரர்களாகி வருகின்றனர்.
ஒடிசா பல ஆண்டுகளாக வறுமையில் சிக்கியுள்ளது. இதனால் மாவோயிஸ்டுகள் சூழ்நிலையை தங்களுக்கு சாதகம் ஆக்கி கொள்கின்றனர் என பேசினார்.
Related Tags :
Next Story