டெல்லி, கோவா உள்ளிட்ட 50 இடங்களில் வருமான வரி துறையினர் சோதனை
டெல்லி, கோவா உள்ளிட்ட 50 இடங்களில் வருமான வரி துறையினர் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.
புதுடெல்லி,
மத்திய பிரதேசத்தில் முதல் மந்திரி கமல்நாத்தின் சிறப்பு பணி அதிகாரி பிரவீன் காக்கர் இல்லத்தில் வருமான வரி துறை அதிகாரிகள் இன்று அதிகாலை 3 மணியில் இருந்து சோதனை நடத்தினர்.
தொடர்ந்து அமீரா குழுமம் மற்றும் மோசர்பேயர் நிறுவனத்தின் தலைவரான ரதுல் பூரி என்பவரின் வீடு மற்றும் பிற இடங்களிலும் சோதனை நடந்து வருகிறது. இதற்காக டெல்லி, கோவா, இந்தூர், போபால் உள்ளிட்ட நகரங்களில் உள்ள 50 இடங்களில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.
இதில் பிரதீக் ஜோஷி என்பவரது இல்லத்தில் கட்டு கட்டாக சூட்கேஸ்களில் பணம் நிரப்பி இருந்தது கண்டறியப்பட்டு உள்ளது.
இந்த அதிரடி சோதனையை 300க்கும் மேற்பட்ட வருமான வரி துறையினர் நடத்தி வருகின்றனர். மிக மிக முக்கிய பிரமுகர்களுக்கான ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் நடந்த ஊழலில் கடந்த 2 நாட்களுக்கு முன் பூரியிடம் அமலாக்க துறை விசாரணை நடத்தியிருந்தது.
இந்த வழக்கில் எந்த தவறும் செய்யவில்லை என கூறிய அவர், இந்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குகிறேன். வழக்கிற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. தனியாக நான் வர்த்தகம் செய்து வருகிறேன். எனது உறவினர்களுடன் வர்த்தக தொடர்புகள் எதுவும் வைத்திருக்கவில்லை என்றும் கூறினார்.
Related Tags :
Next Story