பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கை 2014-ம் ஆண்டின் காப்பி - காங்கிரஸ் குற்றச்சாட்டு
பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கை 2014-ம் ஆண்டில் வெளியிட்டதன் காப்பி என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மத்தியில் ஆளும் பா.ஜனதா கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இதில் பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு உள்ளன. இந்த தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. பா.ஜனதா கடந்த 2014–ம் ஆண்டு வெளியிட்ட தேர்தல் அறிக்கையை காப்பியடித்து மீண்டும் வெளியிட்டு இருப்பதாகவும், அதில் குறிப்பிட்டு இருந்த கால வரையறையை மட்டும் நீட்டித்து உள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் வெளியிட்டுள்ள டுவிட் செய்தியில் ‘கடந்த 2014–ம் ஆண்டு தேர்தலுக்காக பா.ஜனதா வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்த அம்சங்களைத்தான் மீண்டும் காப்பியடித்து வெளியிட்டு உள்ளனர். அதில் இருந்த காலக்கெடுவை மட்டும் 2019–க்கு பதிலாக 2022, 2032, 2047, 2097 என மாற்றியுள்ளனர். அதிர்ஷ்டவசமாக அடுத்த நூற்றாண்டாக நிர்ணயிக்கவில்லை’ என கிண்டலாக கூறியுள்ளார்.
Related Tags :
Next Story