காங்கிரஸ் மற்றும் சி.பி.ஐ.(எம்) கட்சிக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் வீணான வாக்கு; மம்தா பானர்ஜி


காங்கிரஸ் மற்றும் சி.பி.ஐ.(எம்) கட்சிக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் வீணான வாக்கு; மம்தா பானர்ஜி
x
தினத்தந்தி 10 April 2019 5:18 PM IST (Updated: 10 April 2019 5:18 PM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் மற்றும் சி.பி.ஐ.(எம்) கட்சிக்கான ஒவ்வொரு வாக்கும் வீணான வாக்கு என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

சோப்ரா,

மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி, உத்தர் தியானஜ்பூர் நகரில் சோப்ரா பகுதியில் தேர்தல் பேரணி ஒன்றில் இன்று கலந்து கொண்டார்.  இதில் அவர் பேசும்பொழுது, கடந்த காலங்களில் பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் சி.பி.ஐ.(எம்) ஆகிய கட்சிகள் டார்ஜிலிங் தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.  அவர்கள் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.

இந்த முறை பா.ஜ.க.வை ஆட்சியில் இருந்து தூக்கி எறிவதற்கான தேர்தல் நடைபெறுகிறது.  மோடி மீண்டும் பிரதமராகாமல் இருப்பதனை நீங்கள் உறுதி செய்திட வேண்டும்.

காங்கிரஸ் மற்றும் சி.பி.ஐ.(எம்) கட்சிக்கு நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் வீணான வாக்கு.  ஏனெனில் அது பா.ஜ.க.வுக்கு பலனளிக்கும்.  தேர்தல் நேரத்திலேயே பா.ஜ.க.வினர் வங்காளத்திற்கு வருவார்கள்.  அதன்பின் காணாமல் போய் விடுவர்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்தும்.  மத்தியில் அடுத்த அரசு அமைவதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைமை வகிக்கும் என அவர் கூறியுள்ளார்.

நாட்டின் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை நாம் பாதுகாக்க வேண்டும்.  நாட்டிற்காக எனது உயிரை நான் தியாகம் செய்வேன்.  ஆனால் பிரிவினை ஏற்பட ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

Next Story