தமிழகத்தில் தேர்தலை தள்ளிவைக்க கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது
தமிழகத்தில் தேர்தலை தள்ளிவைக்க கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
புதுடெல்லி,
தமிழகத்திலும், புதுச்சேரியிலும் 18–ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அன்றைய தினம் தமிழகத்தில் காலியாக இருக்கும் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது.
அன்றைய தினம் பெரிய வியாழன் மற்றும் மறுநாள் புனித வெள்ளி கடைப்பிடிக்கப்படுகிறது. எனவே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் வாக்குப்பதிவை ஏப்ரல் 18–ந்தேதியில் இருந்து வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என்று சென்னையைச் சேர்ந்த கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்து கடந்த மார்ச் 22–ந்தேதி தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்புக்கு எதிராக கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story