எனக்கு வாக்களிக்காவிட்டால், பாவங்கள் வந்து சேரும்: சாக்‌ஷி மகராஜ் பேச்சால் சர்ச்சை


எனக்கு வாக்களிக்காவிட்டால், பாவங்கள் வந்து சேரும்: சாக்‌ஷி மகராஜ் பேச்சால் சர்ச்சை
x
தினத்தந்தி 13 April 2019 12:12 PM IST (Updated: 13 April 2019 12:14 PM IST)
t-max-icont-min-icon

எனக்கு வாக்களிக்காவிட்டால், பாவங்கள் வந்து சேரும் என்று சாக்‌ஷி மகராஜ் பேசியது சர்ச்சையை கிளப்பியது.

உன்னோ,

பாராளுமன்ற தேர்தலில், உன்னோ தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் சாக்‌ஷி மகராஜ் எனக்கு வாக்களிக்காவிட்டால், சாபம் இடுவேன் என்று வாக்காளர்களை மிரட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

உன்னோவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய சாக்‌ஷி மகராஜ் கூறியதாவது, “ நான் ஒரு துறவி, துறவி ஒன்றை கேட்டு அது கிடைக்கவில்லையென்றால், உங்களிடம் உள்ள அனைத்து நல்லவைகளை எடுத்துக்கொண்டு பாவங்களை திருப்பி தருவார் என்று நமது சாஸ்திரங்களில் உள்ளது.

நான் உங்கள் சொத்துக்களை கேட்கவில்லை. 125 கோடி மக்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் வாக்குகளை தான் கேட்கிறேன்” என்று பேசினார். வாக்காளர்களை மிரட்டும் வகையில் சாக்‌ஷி மகராஜ் பேசியது சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்புகளை பெற்றுள்ளது. 

Next Story