ஜம்மு காஷ்மீர் சோபியானில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை


ஜம்மு காஷ்மீர் சோபியானில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 13 April 2019 1:18 PM IST (Updated: 13 April 2019 1:18 PM IST)
t-max-icont-min-icon

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியானில், இரு தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

ஸ்ரீநகர் 

ஜம்மு காஷ்மீர் சோபியான் மாவட்டம் காஹந்  கிராமத்தில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப்படை வீரர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து அப்பகுதியை அவர்கள் சுற்றிவளைத்து தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது வீரர்களை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதற்கு வீரர்களும் தக்க பதிலடி கொடுத்தனர். இரண்டு மணி நேரத்திற்கு மேலாக இச்சண்டை நீடித்தது. இந்த நிலையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த தீவிரவாதிகள் யார்? எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

Next Story