ராகுல் காந்திக்காக பிரசாரம் செய்ய வயநாடு தொகுதிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் விரைகின்றனர்
வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்திக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்வதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் விரைவில் கேரளா வர இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
வயநாடு,
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது பாரம்பரிய தொகுதியான உத்தரபிரதேசத்தின் அமேதியிலும், கேரளாவின் வயநாட்டிலும் போட்டியிடுகிறார். ராகுல் காந்தி முதல் முறையாக கேரளாவில் போட்டியிடுவதால் தென் இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பெரும் உற்சாகம் ஏற்பட்டு உள்ளது.
இந்த தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து இடதுசாரி மற்றும் பா.ஜனதா கூட்டணி கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. இதனால் அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது. அங்கு வருகிற 23-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், கட்சிகள் அனைத்தும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
ராகுல் காந்தியின் முதல் தென்னாட்டு தேர்தல்களம் வெற்றிகரமாக அமைய வேண்டும் என்பதில் கட்சியினர் உறுதியாக உள்ளனர். எனவே அவரை வயநாட்டில் வெற்றி பெற வைப்பதற்காக மாநில காங்கிரசார் தீவிர களப்பணி ஆற்றி வருகின்றனர். அவர்களுடன் இணைந்து ராகுல் காந்திக்கு வாக்கு சேகரிப்பதற்காக தேசிய தலைவர்களும் வருகிற நாட்களில் கேரளாவுக்கு விரைய இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
அந்தவகையில் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஏ.கே.அந்தோணி, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத், சச்சின் பைலட், ஜோதிராதித்ய சிந்தியா, முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் மாநில மந்திரியுமான சித்து உள்ளிட்ட தலைவர்கள் வயநாட்டுக்கு வர உள்ளனர்.
இதைப்போல ராகுல் காந்தியும், தனது சகோதரி பிரியங்காவுடன் மீண்டும் வயநாட்டுக்கு வர இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. கட்சியின் மூத்த தலைவர்களுடன் இணைந்து அவர்கள் வயநாட்டில் மீண்டும் ஒரு வாகன பேரணி நடத்த இருப்பதாகவும் தெரிகிறது.
இவ்வாறு காங்கிரசின் உயர்மட்ட தலைவர்கள் வயநாட்டில் முகாமிட திட்டமிட்டு உள்ளதால், வருகிற நாட்களில் அங்கு தேர்தல் பிரசாரம் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய தலைவர்களின் வருகை மாநில காங்கிரசாருக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்து உள்ளது.
இதற்கிடையே வயநாடு தொகுதியில் தேர்தலை புறக்கணிக்குமாறு மாவோயிஸ்டுகள் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளனர். இது தொடர்பாக ஏற்கனவே அவர்கள் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்த நிலையில், நேற்று திருநெள்ளி பகுதியில் நோட்டீசுகளையும் ஒட்டி உள்ளனர். இதனால் அரசியல் கட்சிகள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து மாவோயிஸ்டுகளுக்கு எதிராக மாநில போலீசாரும், சிறப்பு அதிரடிப்படையினரும் திருநெள்ளி பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

Related Tags :
Next Story