மோடியை தோற்கடிக்க எதுவும் செய்ய தயார் - அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம்


மோடியை தோற்கடிக்க எதுவும் செய்ய தயார் - அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம்
x
தினத்தந்தி 14 April 2019 8:41 PM IST (Updated: 14 April 2019 8:41 PM IST)
t-max-icont-min-icon

மோடியையும், அமித் ஷாவையும் தோற்கடிக்க எதுவும் செய்ய தயார் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.


புதுடெல்லி,


முதல்கட்ட தேர்தலில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது குறித்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், 
நாடு தற்போது ஆபத்தில் உள்ளது. பிரதமர் மோடியையும், பா.ஜனதா தலைவர் அமித் ஷாவையும் தோற்கடிக்க எதுவும் செய்வோம். அவர்களை தோற்கடித்து, அவர்களிடம் இருந்து நாட்டை காப்பதற்கான எங்களது முயற்சி தொடரும் என்றார். 

நாடாளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி நடத்தி வரும் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை நீடிக்கிறது. டெல்லியில் மட்டும் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. ஆனால், ஆம் ஆத்மியோ அரியானா, பஞ்சாப் மாநிலங்களிலும் கூட்டணி அமைக்க விரும்புகிறது. 

இந்நிலையில் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்துக்கொண்ட காங்கிரஸ் தலைவர் கபில் சிபலிடம், ஆம் ஆத்மி உடனான கூட்டணி தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அவர் கேள்வியை கெஜ்ரிவாலிடம் கேள்வியை மாற்றிவிட்டார். அவருக்கு  நன்றாக தெரியும் என கூறிவிட்டார். காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங் பேசுகையில்‘‘காங்கிரசின் நிலைப்பாடு உங்களுக்கு தெரியும். டெல்லியில் ஏறக்குறைய முடிவு செய்துவிட்டோம். ஆனால், கூட்டணியை பிற மாநிலங்களுடன் இணைப்பது சரியல்ல’’ என்று கூறினார்.

Next Story