தேசிய செய்திகள்

டெல்லியில் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் வாலிபர் சாவு டிக்-டாக் செயலிக்காக வீடியோ பதிவின் போது விபரீதம் + "||" + In Delhi The gun was accidentally exploded The young man dies

டெல்லியில் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் வாலிபர் சாவு டிக்-டாக் செயலிக்காக வீடியோ பதிவின் போது விபரீதம்

டெல்லியில் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் வாலிபர் சாவு டிக்-டாக் செயலிக்காக வீடியோ பதிவின் போது விபரீதம்
டெல்லியில் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் வாலிபர் சாவு டிக்-டாக் செயலிக்காக வீடியோ ஒன்றை பதிவு செய்ய செய்தனர்.
புதுடெல்லி,

டெல்லியின் ஜப்ராபாத் பகுதியை சேர்ந்த சல்மான் (வயது 19) என்ற கல்லூரி மாணவர், தனது நண்பர்களான அமிர், சொகைல் ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு காரில் இந்தியா கேட் பகுதிக்கு சென்றார். பின்னர் வீடு திரும்பும் வழியில் அவர்கள் துப்பாக்கியை உடலில் குறிவைப்பது போன்று டிக்-டாக் வீடியோ ஒன்றை பதிவு செய்ய முடிவு செய்தனர்.


இதற்காக காரின் டிரைவர் இருக்கையில் இருந்த சல்மானின் கன்னத்தில், நாட்டுத்துப்பாக்கி ஒன்றின் முனையை வைத்தவாறு சொகைல் போஸ் கொடுத்தார். அப்போது திடீரென அந்த துப்பாக்கி வெடித்தது. இதில் குண்டுபாய்ந்ததால் படுகாயமடைந்த சல்மான், காரிலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

இதனால் பதறிப்போன நண்பர்கள், உடனே அவரை தங்கள் உறவினர் ஒருவருடன் சேர்ந்து மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சல்மான் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சல்மானின் நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில், சல்மானின் 2 நண்பர்கள் மற்றும் அவர்களின் உறவினரை போலீசார் கைது செய்தனர். டிக்-டாக் செயலிக்கான வீடியோ பதிவின்போது துப்பாக்கி வெடித்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. நலவாரியங்களுக்கு எதிராக செயல்படும் மத்திய அரசை கண்டித்து டெல்லியில் 7-ந்தேதி தர்ணா
நலவாரியங்களுக்கு எதிராக செயல்படும் மத்திய அரசை கண்டித்து டெல்லியில் 7-ந்தேதி தர்ணா கட்டிட தொழிலாளர் சங்க மாநில பொதுக்குழு கூட்டத்தில் முடிவு.
2. டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசிய கொடி ஏற்றினார் குடியரசு தினவிழா கோலாகலம் கண்கவர் அணிவகுப்பை பிரதமர் மோடி பார்வையிட்டார்
டெல்லியில் நேற்று கோலாகலமாக நடைபெற்ற குடியரசு தின விழாவில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றினார். இதையொட்டி நடைபெற்ற கண்கவர் அணிவகுப்பை பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பார்வையிட்டனர்.
3. கமல்ஹாசன் ஜோடியாக நடித்தவர் டெல்லியில் நடிகை பர்ஹீனை தாக்கி கொள்ளை
1993-ல் திரைக்கு வந்த கலைஞன் படத்தில் பிந்தியா என்ற பெயரில் கமல்ஹாசன் ஜோடியாக நடித்து இருந்தார்.
4. டெல்லியில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டனர் நாடாளுமன்றத்தை நோக்கி இன்று பேரணியாக செல்கிறார்கள்
கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துவதற்காக நேற்று டெல்லியில் திரண்ட பல்லாயிரக்கணக்கான விவசாயிகள், இன்று நாடாளுமன்றத்தை நோக்கி ஊர்வலமாக செல்கிறார்கள்.