காங்கிரசின் நியாய் திட்டம் ஊழலுக்கே வழிவகுக்கும்: பியூஸ் கோயல்


காங்கிரசின் நியாய் திட்டம் ஊழலுக்கே வழிவகுக்கும்: பியூஸ் கோயல்
x
தினத்தந்தி 15 April 2019 9:03 AM IST (Updated: 15 April 2019 9:03 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரசின் நியாய் திட்டம் ஊழலுக்கே வழிவகுக்கும் என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்தார்.

புதுடெல்லி,

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், வறுமையை ஒழிக்கும் நோக்கில் ஆண்டுதோறும் தலா ரூ.72,000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அக்கட்சி வாக்குறுதி அளித்துள்ளது. நியாய் என்ற பெயரிலான இத்திட்டத்தின் மூலம் 5 கோடி ஏழைக் குடும்பங்கள் பயன்பெறும் என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த பியூஷ் கோயல், காங்கிரஸ் அறிவித்துள்ள திட்டம், ஊழலுக்குதான் வழிவகுக்கும் என்றார்.மேலும் அவர் கூறுகையில், “மக்களின் வருவாய், ஊதிய அளவுகள் தொடர்பான தரவுகள் எதுவும் இல்லாத நிலையில், காங்கிரஸின் நியாய்திட்டம் செயல்படுத்த முடியாத வாக்குறுதி என்பதே எனது கருத்து. நாட்டின் பொருளாதாரம், நிதி சார்ந்த கண்ணோட்டத்துடன் அணுகினால், இத்திட்டத்தை பேரிடர் என்றே கூறுவேன்.

இத்திட்டத்துக்கான பயனாளிகள் தேர்வில் முற்றிலும் ஊழல்தான் நிறைந்திருக்கும். காங்கிரஸ் கட்சியின் பிரபலமான ஊழல்களின் வரிசையில் இதுவும் இடம்பிடிக்கும்.நாட்டின் நிலையான வளர்ச்சிக்காக, பிரதமர் மோடியின் அரசு பணியாற்றி வருகிறது” என்றார். 

Next Story