2 முறை ஓட்டு பதிவு செய்யுங்கள் என கூறிய பா.ஜ.க. எம்.எல்.ஏ. மீது வழக்கு பதிவு


2 முறை ஓட்டு பதிவு செய்யுங்கள் என கூறிய பா.ஜ.க. எம்.எல்.ஏ. மீது வழக்கு பதிவு
x
தினத்தந்தி 15 April 2019 9:23 AM GMT (Updated: 15 April 2019 9:23 AM GMT)

வாக்காளர்களை 2 முறை ஓட்டு பதிவு செய்யும்படி பிரசாரத்தில் கூறிய பா.ஜ.க. எம்.எல்.ஏ. மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

மகாராஷ்டிராவில் நவிமும்பை பகுதியருகே கோபர்கைரானே நகரில் நடந்த பேரணி ஒன்றில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. மண்டா மாத்ரே கலந்து கொண்டார்.  நவிமும்பையின் பேலாப்பூர் தொகுதியை சேர்ந்த எம்.எல்.ஏ.வான அவர் கூட்டத்தில் பேசும்பொழுது, சட்டாரா பகுதியில் இருந்து இங்கு வந்து பணிபுரிவோர் சொந்த ஊருக்கு சென்று பா.ஜ.க. மற்றும் சிவசேனா கூட்டணியை சேர்ந்த சட்டாரா மக்களவை வேட்பாளர் நரேந்திர பாட்டீலுக்கு வாக்களியுங்கள்.

அதன்பின் திரும்பி வந்து ஏப்ரல் 29ந்தேதி சிவசேனா வேட்பாளர் மற்றும் எம்.பி.யாக உள்ள ராஜன் விசாரேவுக்கு வாக்களியுங்கள் என சர்ச்சையாக பேசினார்.  

இதனை தொடர்ந்து 171டி மற்றும் 171எப் ஆகிய தேர்தல் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் பா.ஜ.க. எம்.எல்.ஏ. மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது என தேர்தல் அலுவலகம் தெரிவித்து உள்ளது.

Next Story