தேசிய செய்திகள்

தேச பாதுகாப்பு என்ற பெயரால் அச்ச உணர்வை ஏற்படுத்துகிறது பாஜக: மெகபூபா முப்தி குற்றச்சாட்டு + "||" + Mehbooba Mufti accuses BJP of creating fear psychosis under guise of national security

தேச பாதுகாப்பு என்ற பெயரால் அச்ச உணர்வை ஏற்படுத்துகிறது பாஜக: மெகபூபா முப்தி குற்றச்சாட்டு

தேச பாதுகாப்பு என்ற பெயரால் அச்ச உணர்வை ஏற்படுத்துகிறது பாஜக: மெகபூபா முப்தி குற்றச்சாட்டு
தேச பாதுகாப்பு என்ற பெயரால் அச்ச உணர்வை பாஜக ஏற்படுத்துகிறது என்று மெகபூபா முப்தி தெரிவித்து உள்ளார்.
ஸ்ரீநகர்,

தேசப் பாதுகாப்பு என்ற பெயரால், அச்ச உணர்வை ஏற்படுத்தி வருகிறது பாஜக; என மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி  தெரிவித்தார்.
இதுகுறித்து மெகபூபா வெளியிட்டுள்ள டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- நமது ராணுவ வீரர்களின் தியாகத்தையும், அவர்களது செயல்பாட்டையும் கூறி இந்த தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்று விடலாம் என்று பாஜகவினர் எண்ணியிருந்தனர். தற்போது, இவை எதுவும் வெற்றிக்கு உதவி செய்யாது என்று கருதிய பாஜக விரக்தியடைந்து விட்டது. 

இதனால், தற்போது தேசப் பாதுகாப்பு என்ற பெயரில் மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தி, பாலாகோட்டில் நடத்தியதைபோல மீண்டும் ஒருமுறை தாக்குதலை நடத்த பாஜக திட்டமிட்டு வருகிறது” என தெரிவித்து உள்ளார்.