பாஜகவுக்கு முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டாம்: சித்து சர்ச்சை பேச்சு


பாஜகவுக்கு முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டாம்: சித்து சர்ச்சை பேச்சு
x
தினத்தந்தி 17 April 2019 7:34 AM IST (Updated: 17 April 2019 7:34 AM IST)
t-max-icont-min-icon

பாஜகவுக்கு முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டாம் என்று பஞ்சாப் அமைச்சர் சித்து பேசியது சர்ச்சையை கிளப்பியது.

அமிர்தசரஸ்,

பிகாரின் கடிகார் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் தாரிக் அன்வருக்கு ஆதரவாக, பஞ்சாப் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான நவ்ஜோத் சிங் சித்து  பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில்,  “நீங்கள் (முஸ்லிம் மக்கள்) உங்களை சிறுபான்மையினராகக் கருத வேண்டாம். 

இந்தத் தொகுதியைப் பொருத்தவரையில் நீங்கள் தான் பெரும்பான்மையினர். நீங்கள் சுமார் 64 சதவீதம் உள்ளீர்கள். எனவே, பாஜகவுக்கு எதிராக வாக்களித்து, நரேந்திர மோடியைத் தோற்கடியுங்கள். அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் தலைவரான அசாதுதீன் ஒவைஸி போன்றவர்களின் பேச்சை நம்ப வேண்டாம். அவர்களை பாஜக மறைமுகமாக ஆதரித்து வருகிறது” இவ்வாறு அவர் பேசினார்.

சித்துவின் பேச்சுக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். வாக்களர்கள் மத்தியில் பிரிவினை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக சித்துவுக்கு எதிராக போலீசில் தேர்தல் ஆணையம் புகார் அளித்துள்ளது. 

மேலும், தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கும் மாநில தேர்தல் ஆணையம் அறிக்கை அனுப்பியுள்ளது. தேர்தல் பிரசாரத்தின்போது, மத ரீதியில் பேசியதற்காக, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி உள்ளிட்டோருக்குப் பிரசாரத்தில் ஈடுபட தேர்தல் ஆணையம் தடை விதித்தது நினைவுகூரத்தக்கது.


Next Story