சட்டத்தின் படியே சோதனை நடைபெறுகிறது, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இல்லை: பிரதமர் மோடி


சட்டத்தின் படியே சோதனை நடைபெறுகிறது, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இல்லை: பிரதமர் மோடி
x
தினத்தந்தி 20 April 2019 5:39 AM GMT (Updated: 20 April 2019 5:39 AM GMT)

சட்ட விதிகளின் படியே வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

புதுடெல்லி, 

மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், நாடு முழுவதும் அரசியல் பின்னணி கொண்டவர்களுக்கு சொந்தமான இடங்கள் என பல்வேறு இடங்களில்  வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. ஆனால், எதிர்க்கட்சியினரை குறிவைத்து, அவர்களை மிரட்டும் வகையில் சோதனை நடப்பதாக எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இந்த குற்றச்சாட்டை நேரடியாக முன்வைத்தனர். 

இந்த சூழலில், டைம்ஸ் நவ்  ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மோடி, இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி கூறும் போது, ”சில அரசியல் தலைவர்களுக்கு எதிராக நடைபெறும் வருமான வரித்துறை சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இல்லை. இந்த சோதனைகள் அனைத்தும் சட்டவிதிகளின் படியே நடைபெறுகிறது” என்றார்.  

Next Story