உத்தரகாண்ட் மாநிலத்தில் ரெயில் மோதி 2 யானைகள் பலி
தினத்தந்தி 21 April 2019 1:29 AM IST (Updated: 21 April 2019 1:29 AM IST)
Text Sizeஉத்தரகாண்ட் மாநிலத்தில் ரெயில் மோதி 2 யானைகள் பலியாயின.
ஹரித்துவார்,
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவார் மாவட்டத்தில் ஜமல்பூர் காலன் பகுதியில் வனப்பகுதி உள்ளது. இங்கு நேற்று முன்தினம் காலை நந்தாதேவி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றபோது 2 ஆண் யானைகள் தண்டவாளத்தை கடக்க முயன்றன. அப்போது யானைகள் மீது ரெயில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 2 யானைகளும் சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தன. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire