கட்சி தொண்டர்களிடம் கள்ள ஓட்டு போடக்கூறிய பா.ஜனதா பெண் வேட்பாளர் - உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்


கட்சி தொண்டர்களிடம் கள்ள ஓட்டு போடக்கூறிய பா.ஜனதா பெண் வேட்பாளர் - உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்
x
தினத்தந்தி 21 April 2019 2:52 AM IST (Updated: 21 April 2019 2:52 AM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேசத்தில் பா.ஜனதா பெண் வேட்பாளர் கட்சி தொண்டர்களிடம் கள்ள ஓட்டு போடக்கூறிய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

படான்,

உத்தரபிரதேசத்தின் படான் தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடுபவர் சங்மித்ரா மவுரியா. மாநில மந்திரி சுவாமி பிரசாத் மவுரியாவின் மகளான இவர், சமீபத்தில் கட்சியின் பிரசார கூட்டம் ஒன்றில் பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘தேர்தலில் ஒரு ஓட்டும் வீணாகக்கூடாது. யாராவது ஓட்டுப்போடவில்லை என்றால், அது கள்ள ஓட்டாக போடப்படுவது இயல்பு. எனவே உண்மையான வாக்காளர்கள் அனைவரும் ஓட்டுப்போட நீங்கள் முயற்சிக்க வேண்டும். அப்படியும் அவர்கள் வராமல் போனால், அவர்களது ஓட்டை நீங்கள் போடலாம். அப்படி ஒரு வாய்ப்பு உங்களுக்கு கிடைத்தால், அதை நீங்கள் வீணாக்கக்கூடாது’ என்று தெரிவித்தார்.

இது குறித்த வீடியோ பதிவுகள் உத்தரபிரதேசத்தில் வேகமாக பரவி வருகிறது. இதைப்பார்த்த அரசியல் கட்சியினர் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக சங்மித்ரா மவுரியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


Next Story