உத்தரபிரதேசத்தில் 165 பள்ளிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை


உத்தரபிரதேசத்தில் 165 பள்ளிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை
x
தினத்தந்தி 1 May 2019 12:00 AM IST (Updated: 30 April 2019 11:40 PM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேசத்தில் 165 பள்ளிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

லக்னோ,

உத்தரபிரதேசத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் மிகவும் அதிர்ச்சிகரமாக 165 பள்ளிகளில் எந்தவொரு மாணவ, மாணவியருமே தேர்ச்சி பெறவில்லை.

இதுமட்டுமின்றி 385 பள்ளிகளில் 20 சதவீதத்திற்கும் குறைவான மாணவ, மாணவியர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இதற்கு முந்தைய கால கட்டத்தில் உயர்நிலைப்பள்ளி தேர்வில் அதிகப்படியாக காப்பி அடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் கவுசாம்பி என்ற இடத்தில் உள்ள 13 பள்ளிகளிலும் மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெறவில்லை.

தேர்வின்போது மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக உத்தரபிரதேச பள்ளி கல்வி இயக்குனரான வினய்குமார் கூறியுள்ளார். 10-ம் வகுப்பை பொறுத்த வரை 50 அரசு பள்ளிகளும், 5 அரசு உதவிபெறும் பள்ளிகளும் 84 தனியார் பள்ளிகளும் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை.

12-ம் வகுப்பை பொறுத்தவரை 15 அரசு பள்ளிகளும், 58 அரசு உதவிபெறும் பள்ளிகளும், 176 தனியார் பள்ளிகளும் அனைத்து மாணவர்களும் தேர்வில் தோல்வி அடைந்தனர்.


Next Story