நக்சலைட்டுகள் தாக்குதல் 16 வீரர்கள் உயிரிழப்பு; பிரதமர் மோடி கண்டனம்


நக்சலைட்டுகள் தாக்குதல் 16 வீரர்கள் உயிரிழப்பு; பிரதமர் மோடி கண்டனம்
x
தினத்தந்தி 1 May 2019 9:46 AM GMT (Updated: 2019-05-01T15:16:40+05:30)

மகாராஷ்டிரா மாநிலம் கட்ச்ரோலியில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 16 கமாண்டோ படை வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மும்பை

மகாராஷ்டிரா மாநிலம், கட்சிரோலி மாவட்டத்தில் நக்சலைட்டுகள் இன்று அதிகாலை திடீரென்று வெறியாட்டத்தில் ஈடுபட்டனர். சாலை அமைக்கும் பணிகளை செய்யும்  தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான 25 வாகனங்களை கும்பலாக வந்த நக்சலைட்டுகள் தீயிட்டு கொளுத்தினர்.

மேலும், கமாண்டோ படை வீரர்கள்  சென்ற போலீஸ் வாகனத்தின் மீது வெடி  குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 16  கமாண்டோ படை வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் தொடர்பான தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு கூடுதலாக போலீசார் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு நக்சலைட்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை  தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நக்சலைட்டுகள் தாக்குதலுக்கு  பிரதமர்  மோடி கண்டனம் தெரிவித்து உள்ளார். நமது வீரர்களின் தியாகம் ஒரு போதும் மறக்கப்பட மாட்டாது என கூறி உள்ளார்.

Next Story