ஐதராபாத்தின் சார்மினார் கோபுரம் சேதம் அடைந்தது
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் அடையாள சின்னமான சார்மினார் கோபுரம் நேற்று இரவு சேதம் அடைந்தது.
ஐதராபாத்
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் அடையாள சின்னமாக விளங்குவது சார்மினார் கோபுரம் ஆகும். இந்த கோபுரம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு நிறுவனம் (ஏ.எஸ்.ஐ.) மூலம் புதுப்பிக்கப்பட்டது.
நேற்று இரவு கோபுரம் ஒன்றின் ஒரு அலங்கார வேலைப்பாடு துண்டு ஒன்று சேதம் அடைந்து விழுந்தது.
இந்த நினைவுச்சின்னம் நான்கு கோபுரங்களை கொண்டதால் சார்மினார் என பெயரிடப்பட்டது. மக்கா மஸ்ஜிதின் முகத்தை எதிர்கொள்ளும் கோபுரத்தில் சேதம் ஏற்பட்டது என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் சுமார் இரவு 11.30 மணியளவில் நடந்து உள்ளது. இந்த சம்பவம் நினைவுச்சின்னம் அமைந்துள்ள பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. ஆனால் யாருக்கும் எந்த காயமும் இல்லை.
சார்மினார் 400 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சுண்ணாம்பு கட்டிடமாகும். இது 1591-ஆம் ஆண்டில் குதுப் ஷாஹி வம்சத்தின் ஐந்தாவது மன்னரான முகம்மது குலி குதுப் ஷாவால் கட்டப்பட்டது. 428 வயதான இந்த கட்டிடம் தரை மட்டத்திலிருந்து 160 அடி உயரத்தில் உள்ளது.
Related Tags :
Next Story