பானி புயல்; சென்னையில் இருந்து கொல்கத்தா செல்லும் வழியில் 223 ரெயில்கள் ரத்து
பானி புயலை அடுத்து சென்னையில் இருந்து கொல்கத்தா செல்லும் வழியில் மே 4ந்தேதி வரை 223 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
சென்னை,
தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த பானி புயல், அதிதீவிர புயலாக மாறி வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் 3 ஆம் தேதி ஒடிசா மாநிலத்தில் கரையை கடக்கும்.
இதனால் தமிழகத்துக்கு பாதிப்பில்லை. கடலோர மாவட்டங்களில் லேசான காற்று வீசக்கூடும். சென்னையில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இந்த நிலையில் பானி புயலை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசா கடலோர பகுதியில் சென்னையில் இருந்து கொல்கத்தா செல்லும் வழியில் மே 4ந்தேதி வரை 223 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
Related Tags :
Next Story