பானி புயல் ஒடிசாவின் பூரியை தாக்கியது 2 மணி நேரத்தில் கரையை கடக்கும்


பானி புயல் ஒடிசாவின் பூரியை தாக்கியது  2 மணி நேரத்தில் கரையை கடக்கும்
x
தினத்தந்தி 3 May 2019 9:49 AM IST (Updated: 3 May 2019 9:51 AM IST)
t-max-icont-min-icon

பானி புயல் ஒடிசாவின் பூரியை தாக்கியது 2 மணி நேரத்தில் கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்து உள்ளது. #CycloneFani

பூரி,

தென்கிழக்கு வங்கக் கடலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக மாறியது. பின்னர் அது அதிதீவிர புயலாக உருவெடுத்தது. பானி என பெயரிடப்பட்ட அந்த புயல் தமிழகத்தின் வடகடலோர பகுதியில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது மிக தீவிர புயலாக மாறி வட கிழக்கு திசை நோக்கி நகர்ந்து, ஒடிசாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த புயலானது, இன்று காலை 8 மணி முதல் 11 மணி வரை கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டது. 

இதன்படி, பானி புயல் கோபால்பூர்-சந்த்பாலிக்கு இடையே கரையைக் கடக்க துவங்கியது என்று ஒடிசா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

பானி புயல் ஒடிசாவை தாக்கியது. ஒடிசா பூரி மாவட்டத்தை புயல் தாக்கியது.

ஒடிசா வானிலை மைய இயக்குனர் பிஸ்வாஸ் கூறியதாவது:-

 மிகவும் கடுமையான சூறாவளி  காற்றுடன் மழை காலை 8 மணிக்கு தொடங்கியது. புயலின் கண் பகுதி  ஏற்கனவே நிலப்பகுதிக்குள் நுழைந்துள்ளது. இது கரையை கடக்க  2 மணிநேரம் ஆகும்.  புயல் கரையை கடக்கும் முக்கிய  நிலப்பகுதி பூரிக்கு அருகில் உள்ளது. அது காலை 10.30 வரை தொடரும். என கூறி உள்ளார்.

பானி புயலால் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

பட்சானா-20மிமீ
ரசூல்பூர்-33.6மிமீ
சுகிண்டா-31.2மிமீ
பிஞ்ச்கர்பூர்-33.4மிமீ
கொரியி-36.6மிமீ
ஜஜ்பூர்-25 மிமீ
தனகடி-27மிமீ
பரி-15.5மிமீ
தசரத்பூர்-18 மிமீ
தர்மசாலா-15 மிமீ
மொத்த மழை அளவு -255.3மிமீ
சராசரி -25.53மிமீ

Next Story