ஒடிசா பானி புயல் பாதிப்பு: 6 பேர் பலி


ஒடிசா பானி புயல் பாதிப்பு: 6 பேர் பலி
x
தினத்தந்தி 3 May 2019 11:00 AM GMT (Updated: 3 May 2019 11:00 AM GMT)

பானி புயல் ஒடிசா மாநிலத்தின் கோபால்பூர் - சந்த்பாலி இடையே இன்று கரையைக் கடந்தது. மேற்கு வங்கம் நோக்கி புயல் நகர்ந்து வருகிறது.

புவனேஸ்வர்

போனி புயல் ஒடிசா மாநிலத்தின் கோபால்பூர் - சந்த்பாலி இடையே இன்று கரையைக் கடந்தது. மேற்கு வங்கம் நோக்கி புயல் நகர்ந்து வருகிறது.

அதி தீவிர புயலான பானி புயல் ஒடிசா மாநிலம் புரி பகுதியில் கரையை கடந்தது. ஒடிசாவின் கஞ்சம் பகுதியை சூறையாடியது பானி புயல்.  பானி புயலால் இதுவரை 6 பேர் உயிரிழந்ததாக  தகவல் வெளியாகி உள்ளது.

மேற்கு வங்கம் நோக்கி புயல் நகர்ந்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் அந்த மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தனது அனைத்து பிரசார பயணங்களையும் ரத்து செய்தார்.

இன்று இரவு 8.30 மணிக்கு மேற்கு வங்கத்தை தாக்குகிறது பானி புயல் என  வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.மேற்கு வங்கத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்கத்தா விமான நிலையம் மூடப்பட்டு உள்ளது.

Next Story